விமான விபத்தில் இறந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், இறந்தபோன வீரரின் மகள் ஒருவர் விமான விபத்தில் ஏன் ஒரு வி.ஐ.பி.யும் பலியாவதில்லை? காவலர்கள் மட்டுமே பலியாவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
செவ்வாய்க்கிழமை தில்லியின் துவார்கா பகுதியில் பிஎஸ்எப் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 2 விமானிகள் மற்றும் 8 தொழில்நுட்ப நிபுணர்கள் உட்பட 10 வீரர்கள் பலியாகினர்.
இந்த கோர விபத்தில் பலியான பிஎஸ்எப் வீரர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த ராஜ்நாத் சிங், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.


அப்போது, விபத்தில் இறந்த உதவி ஆய்வாளர் ரபீந்தர் குமாரின் மகள், `விமான விபத்தில் ஏன் ஒரு வி.ஐ.பி.யும் பலியாவதில்லை? காவலர்கள் மட்டுமே பலியாவது ஏன்?' ராஜ்நாத் சிங்கிடம் கேள்வி எழுப்பினார். கண்களீல் நீர் வழிய அந்தப் பெண்ணை ஆறுதல்படுத்திய ராஜ்நாத் சிங், அவர் சுட்டிகாட்டிய அனைத்து குறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்றார்.
இந்த விபத்தில் இறந்த ஒவ்வொரு காவலர் குடும்பத்தினருக்கும் பின்னால் ஏதாவது ஒரு சோகக் கதை உள்ளது.
உதவி விமானியான ராஜேஷ் சிவ்ரானின் மாமனார் பேசுகையில், `எல்லைப் பாதுகாப்பு படையின் விமானம் நாளுக்கு நாள் பழையதாகி வருகிறது. எப்போது புதிய விமானம் வரும் என தெரியவில்லை' என்று தனது மருமகன் கூறியதாக கூறினார். யூ.கே.ஜி பயிலும் தனது மகளின் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்பதாக உறுதியளித்துவிட்டு காலையில் பணிக்கு சென்ற சிவ்ரான், உயிரற்ற சடலமாகத்தான் வீடு திரும்பினார்.
உதவி ஆய்வாளர் டி.பி.சௌகான் குடும்பத்தினர் கூறுகையில், புதிய விமானம் வாங்குவது தொடர்பான கோட்பு வெகுநாட்களாக திறக்கப்படவே இல்லை என்றனர்.
இதில் முதன்மை விமானி பகவதி பிரசாத் பாட் கதை சோகமானது. அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்தது. `நான் என்ன செய்ய போகிறேன்' என்ற பகவதி பிரசாத்தின் மனைவியின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்கிறார் அவரது தாயார்.
இறந்துபோன காவலர்களின் குடும்பத்தினர் பழைய விமானம் குறித்து புகார் தெரிவிக்கும் நிலையில், அந்த விமானம் பறக்கும் தகுதி பெற்றிருந்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் டி.கே. பட்தாக், உள்துறை இணை அமைச்சர் கிரண் ராஜு ஆகியோர் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


